உள்ளங்களை நேசிப்பவர்கள்

Sunday, December 11, 2011

சிவன்மலையில் பௌர்ணமி கிரிவலம்

கொங்கு மண்டலமான திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்தில் சிவன்மலை எனும் சிவவாக்கியரின் சித்தர்மலை உள்ளது.

இம்மலையானது சிவனின் உருவமான  லிங்க வடிவத்தில் அழகிய வனப்புடன் இயற்கை எழிலோடு ரம்யமாக அமைந்துள்ளது.

இங்கு சுப்ரமணிய சுவாமியாக முருகப்பெருமாள் வள்ளி மற்றும் தெய்வானையுடன் இணைந்து சிவாச்சலபதியாக அருள்பாலிக்கிறார்

மாதம்தோறும் பௌர்ணமி தினத்தில் மலையின் பின்புறம் சிவகுடிலாக அமைந்திருக்கும் சித்தர் குடிலில் யாக பூஜைகளும், நாம ஜப வேள்விகளும் தவத்திரு சுவாமி ரத்தினானந்தகிரி அவர்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.


இங்கு ஒவ்வொரு பௌர்ணமி பூஜை தினத்தில் பல்வேறு தரப்பட்ட மக்கள் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கையை ஆண்டவன் முன் சமர்ப்பிக்கின்றனர்

இவ்வாறு தொடர்ந்து வரும் மூன்று பௌர்ணமி பூஜையில் கலந்துகொண்டு   கிரிவலம் மேற்கொள்ளும் பக்க்தர்களுக்கு தங்களது கோரிக்கைகள் நிறைவேறுவதாக கூறுகின்றனர். 


பௌர்ணமி அன்று இரவு நேரத்தில் மலையை சுற்றி "ஓம்சிவ சிவஓம்எனும் திருமந்திரத்தை சொல்லிகொண்டே கிரிவலம் வந்தால் நம் ஊழ்வினைகள், கருமவினைகள் நீங்கி வாழ்வில் சிறப்புற வாழலாம்.

இம்மலையை சுற்றி பல்வேறு வகையான சஞ்சீவீ மூலிகைகள் இருக்கின்றது இதனுடைய சக்தியானது பௌர்ணமி நாட்களில் இரவு நேரத்தில் அதிகமாக இருக்கும் அப்போது நாம் மலையை கிரிவலம் சுற்றி வரும்போது  சஞ்சீவீ மூலிகை காற்று நம்மீது பட்டால் தீராத நோய்களும் விலகும்.


இம்மலையை சுற்றிவர...  

  பௌர்ணமி தினத்தில் மூன்று முறை கிரிவலம் வந்தால் தொழில் தடை, வியாபார தடை, திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் உண்டாகும்.

  ஐந்து முறை பௌர்ணமி கிரிவலம் வந்தால் பஞ்சமஹா பாவங்கள் படிப்படியாக குறைந்து விலகும். (கொலை, களவு, கள், காமம், பொய் இவை பஞ்சமஹா பாவம் ஆகும்)

  ஒன்பது முறை பௌர்ணமி கிரிவலம் வந்தால் நவக்கிரக தோஷம் நீங்கும், நவகிரக் கோவில்களுக்கு சென்று வந்த பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அனைவரும் கிரிவலம் வருக! முருகனின் அருள் ஆசி பெருக!

No comments:

Popular Posts