உள்ளங்களை நேசிப்பவர்கள்

Monday, November 12, 2012

இதயங்கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....


உங்கள் அனைவருக்கும்... எனது இதயங்கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

Friday, October 19, 2012

எது நல்ல நாள்?.....எது கெட்ட நாள்?

இந்த செய்தியை மரியாதைக்கு உரிய சித்தர்கள் ரகசியம் அவர்களின் வலைதளத்தில் இருந்து இங்கு பதியப்படுகிறது 

 

அஷ்டமி, நவமி கெட்ட நாட்களா?

 

"சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் எனக் கூறி வந்ததை நினைவுபடுத்தினேன். எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ஒரு வீட்டுமனை இருப்பதாகவும் விலையும் சற்று சகாயமாகவுள்ளதாகவும் கூறினார். அதைப் போய் இன்று பார்த்துவிட்டு வரலாம் என்று கூறினேன். உடனே என் சகோதரி இன்று வேண்டாம் அண்ணே என்றாள். நான் ஏன்? இன்று விட்டால் மனை கிடைக்காமல் போகலாம் வேகமாக விற்று வருவதாகக் கேள்விப் பட்டேன். இன்று ஏன் வேண்டாம் என்கிறாய்? எனச் சகோதரியைக் கேட்டேன். அவர் இன்று அஷ்டமி, நாளை நவமி என்றாள். ஆகையால் நாளை மறுநாள் போய் பார்க்கலாம் என்று சொன்னார்.

நான் அஷ்டமி, நவமி என்றால் என்ன? ஏன் கூடாது என்பதற்குக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு என் சகோதரி எனக்கு விளக்கம் தெரியாது அண்ணே, ஆனால் எல்லோரும் அவை நல்ல நாட்கள் இல்லை என்பதால் நானும் கூறினேன் என்று கூறினார்.

நான் சிரித்துக் கொண்டே அஷ்டமி, நவமியில் நீங்கள் சாப்பிடுவதில்லையா? ரயில், பஸ், விமானம் ஆகியவை ஓடுவதில்லையா? மருத்துவமனை, வங்கிகள் மற்றும் அலுவலகங்கள் செயல்படுவதில்லையா? அவசர அறுவை சிகிச்சையைத் தவிர்க்கிறோமா? என்று கேட்டேன்.

அதற்கு என் சகோதரி போங்க அண்ணா, நீங்க எப்போதும் இப்படித் தான் எடக்கு முடக்காகப் பேசுவீர்கள் என்று கேலி செய்தார். நான், இல்லையம்மா இதற்கு விளக்கம் கூறுகிறேன். நாம் ஓரளவு படித்தவர்கள் எதையும் அறிவுப்பூர்வமாக சிந்தித்துத் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று கேட்டேன். மைத்துனரும், என் சகோதரியும் நீங்கள்தான் விளக்குங்களேன் என்றார்கள்.

நான் பின்வரும் விளக்கத்தைக் கூறினேன்.

ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள். நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள். பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழ் வருடங்களின் பெயரை கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள்? நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு திண்டாடுகிறோம். அதே போல் தான் நாட்களின் பெயர்களும் பின்வருமாறு வடமொழியில் உள்ளன என்று விளக்கினேன்.

1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.

2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.

3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?

4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.

5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.

6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.

7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?

8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.

9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.

10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்று கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.

11. ஏகாதசி என்றால் பதினொன்றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.

12. துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.

13. திரியோதசி என்றால் பதிமூன்றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.

14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.

சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். இப்படி நாட்களைக் சுட்டிக் காட்ட வைத்த பெயர்களில் என்ன வேறுபாடு இருக்கிறது? அமாவாசை அல்லது பவுர்ணமிக்குப் பிறகு வரும் எட்டாம் நாளும் ஒன்பதாம் நாளும் கெட்டவை என்பதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருந்தால் கூறுங்கள் என்று கேட்டேன். சகோதரியும் மைத்துனரும் வாயடைத்துப் போயினர். இந்த விளக்கம் கண்டு அவர்கள் மிகத் தெளிவு பெற்றனர்.

நான் மேலும் கூறினேன். அட்சய திரிதியையில் தங்கம் வாங்க அறியாத மக்கள் தங்கக் கடைக்கு ஓடுவதும் அறியாமையே என்றேன். என் சகோதரி மிகவும் ஆர்வமாக இதற்கும் விளக்கம் கூறுங்கள் அண்ணா என்று கேட்டுக் கொண்டாள். க்ஷயம் என்றால் தேய்வு (-க்ஷயரோகம் = எலும்புருக்கு நோய் அக்ஷயம் என்றால் வளர்ச்சி அதாவது வளர்பிறையில் அமாவாசையிலிருந்து மூன்றாம் நாள் திரிதியை என்று ஏற்கெனவே விளக்கிக் கொண்டோம். அதாவது வளர்பிறையில் மூன்றாம் நாள் இதில் என்ன சிறப்பு இருக்க முடியும்? இது தங்க வியாபாரிகள் சேர்ந்து செய்த விற்பனை உத்தியே ஆகும் என்று விளக்கம் கூறினேன்.

மக்கள் எப்படி அறியாமையில் மூழ்கிப் போயிருக்கிறார்கள் என்று அனைவரும் பரிதாபப்பட்டோம். பிறகு அன்றே மூவரும் சென்று வீட்டு மனையைப் பார்வையிட்டு இடம் பிடித்திருந்ததால் முன் பணம் செலுத்தி பத்திர நகல்களை வாங்கி வந்தோம். அஷ்டமி, நவமி பார்த்துத் தாமதம் செய்திருந்தால் இந்த வாய்ப்பு கிட்டுமா என்று மகிழ்ந்தோம்."

“செய்யும் வேலைகளின் வெற்றி தன்னை நம்பி இல்லை, கடவுளை நம்பித்தான் இருக்கிறது“ என்று நினைத்து உருவாக்கப்பட்ட “நல்ல நேரம், கெட்ட நேரம்“ என்ற பயங்கள் உலகெங்கும் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. (நம் நாட்டில் கொஞ்சம் அதிகம்).

இந்திய அளவில் உள்ள பஞ்சாங்கங்களின்படி ஒரு மாதத்திற்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று கணக்கிட்டுப்பார்ப்போம்.

வாரத்தில் செவ்வாய், சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது (10 நாட்கள்). 

மாதத்தின் அஷ்டமி, நவமி நன்மைக்கு உகந்தது அல்ல (4 நாட்கள்).

பாட்டிமுகம் நாளில் நல்லது செய்வது நல்லதில்லை (2 நாட்கள்).

ஒரு மாதத்தில் வரும் ராகு காலம், எமகண்டம், குளிகை இவற்றின் கூட்டுத்தொகை (3 முக்கால்) தவிர கௌரி பஞ்சாங்கத்தின் படி நன்மை செய்ய தகாத நாட்கள் 2 நாட்கள்.

ஆக மொத்தத்தில் ஒரு மாதத்தில் 21 முக்கால் நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் எப்படி உருப்பட...எப்படி முன்னேற...?

என்று தணியும் நம் மக்களிடம் நிரம்பியுள்ள அறியாமையின் மோகம்?"

அஷ்டமி, நவமி பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதுபற்றி அதிகமாகத் தெரியாது. மேற்கண்ட மின் அஞ்சல் செய்தியைப் படிதுவிட்டு இரண்டு பெண்களிடம் "அஷ்டமி, நவமி நல்ல நாட்களா, கெட்ட நாட்களா?" என்று கேட்டேன். 'கெட்ட நாட்கள் என சட்டென பதில் சொன்னார்கள். அப்பொழுதுதான் புரிந்தது எல்லா சகோதரிகளும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று. மேற்கண்ட செய்தியை பிரதி எடுத்துக் கொடுத்தேன். முழுமையாகப் படித்தார்கள். பிறகு மீண்டும் கேட்டேன் "அஷ்டமி, நவமி நல்ல நாட்களா, கெட்ட நாட்களா?" என்று. அவர்களால் சட்டென பதில் சொல்ல முடியவில்லை. மௌனமானார்கள். ஆனால் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பது மட்டும் தெரிந்தது.

பிறரை சிந்திக்கத் தூண்டும் நல்லதொரு செய்தியைப் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி! நீங்களும் பிறருக்குப் பகிரலாமே!


Saturday, August 18, 2012

சுதந்திர தின கொண்டாட்டம்!!!

நம்து நாட்டின் 66 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாங்களும் எங்களது பகுதில் சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடினோம். அதனை நான் உங்களோடு பகிர்ந்துகொள்ள மகிழ்ச்சி கொள்கிறேன்.

எங்களது பகுதியானது காங்கேயம் மாநகரில், கோவை ரோட்டில் அமைந்துள்ள லட்சுமி நகர் ஆகும். இங்கு மக்கள் முன்னிலையில் சுதந்திர தின கொடியேற்றி, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் திரு.கந்தசாமி (முன்னால் காந்தி கதர் வாரிய ஊழியர்) அவர்களால் கொடியேற்றம் செய்யப்பட்டது, மேலும் சிறப்பு விருந்தினராக திரு. துரைசாமி அவர்கள் 13ம் நம்பர் வார்டு மக்கள் பிரதிநிதி கலந்துகொண்டார்.

இவ்விழாவானது நான், திரு.சாம்ராஜ்,  திரு.சௌந்தராஜ் மற்றும் திரு.செந்தில் அவர்களால் ஏற்ப்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இது எங்களது நகரில் நாங்கள் நடத்தும் 10ம் ஆண்டு விழாவாகும்.

இவ்விழாவின் சில நிழற்படங்கள் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
































              வாழ்க பாரதம்!   வந்தே மாதரம்!!   ஜெய் ஹிந்த்!!!

Saturday, July 14, 2012

பரோட்டா சாப்பிட போகறீங்களா.............!பரோட்டா பிரியர்களே........! முதலில் இதப்படிங்க.......!

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால்தான் சாப்பிட்ட திருப்திகிடைக்கிறதா? உங்களுக்குத்தான் இந்தப் பதிவு......

இன்று தமிழகம் முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது பரோட்டா கடை. அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு, குற்றாலம் பார்டர் பரோட்டா, விருதுநகர் பரோட்டா, தூத்துக்குடி பரோட்டா, கொத்துப் பரோட்டா, சில்லிப் பரோட்டா சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே. பின்னாடி படிங்க!....
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா....

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் ஒரு பதார்த்தம். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?

மைதா மாவில் உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டித், திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.

பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை துவங்குகிறது. பரோட்டா மட்டுமல்லாது நம் பிறந்தநாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதாவில் இருந்து தயாரிக்கபடுகிறது.

மைதா எப்படித் தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக்கப்பட்டக் கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயனம் கொண்டு வெண்மை யாக்குகிறார்கள், அதுவே மைதா.
Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயனம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நீரழிவிற்குக் காரணமாகிறது.

இது தவிர Alloxan என்னும் ராசாயனம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்கப் படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது.
இந்த Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நீரழிவு நோய் வரவழைப்பதற்குப் பயன்படுகிறது, ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நீரழிவு வர துணை புரிகிறது.

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல, மைதாவில் நார் சத்து கிடையாது, நார் சத்து இல்லா உணவு நம் சீரண சக்தியை குறைத்து விடும்.

இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது, எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

மைதாவை நாம் உட்கொள்ளும் போது சிறுநீரகக் கோளாறுகள், இருதய கோளாறு, நீரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு.
மைதாவின் தீமைகள் குறித்து நமது அண்டை மாநிலமான கேரளத்தில் ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

முதுகுத்தண்டுக் கோளாறு, ருமாடிசம், ஆர்தரடிஸ், வாய்வுத் தொல்லை போன்ற நோயினால் அவதிப்படும் நண்பர்கள், தயவு செய்து பரோட்டாவைப் பார்க்கக் கூடச் செய்யாதீர்கள். பரோட்டா மலச்சிக்கலை ஏற்படுத்தி வாதத்தன்மையை அதிகப்படுத்தும்.

நாமும் விழித்துக் கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, தினை,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம்.


Monday, May 28, 2012

சதுரகிரி மலை பயணத்தை பற்றிய பதிவு...

இது  சதுரகிரி மலை பயணத்தை பற்றிய பதிவு...

எனது நண்பர்களோடு 17.05.2012 (வியாழன்) அன்று சதுரகிரி பயணம் மேற்கொண்டோம் அதன் அனுபவங்களையும் புகைப்படங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சதுரகிரி சுந்தர மற்றும் சந்தன மகாலிங்கத்திற்கு பணிவான எனது முதற்கண் வணக்கங்கள். 
நாங்கள் எனது நண்பரின் வாகனத்தில் காங்கேயத்தில் இருந்து சதுரகிரி  நோக்கி 8 பேர் பயணித்தோம்.
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சுந்தரமகாலிங்கம் மலை கிட்டத்தட்ட நாற்பது கிலோமீட்டர் தொலைவு இருக்கும்.  ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வத்திறாயிருப்பு இருபது கிலோமீட்டர் தூரம் இருக்கும்.  அடிக்கடி பேருந்து, மினி பஸ் வசதி இருக்கிறது.  வத்திறாயிருப்பிலிருந்து தாணிப்பாறை செல்ல வேண்டும்.  பத்து கிலோமீட்டர் தூரம் இருக்கும்.  தாணிப்பாறையிலிருந்து அடிக்கடி மினி பஸ், ஆட்டோ வசதி இருக்கின்றன.

முதலில் தாணிப்பாறை

தாணிப்பாறையிலிருந்து சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மலைப்பாதை கால்நடையாக செல்ல வேண்டும்.  கிட்டத்தட்ட ஏழு முதல் பத்து கிலோமீட்டர் தூரம் இருக்கலாம். அருகிலுள்ள சின்ன அருவியில் குளித்து விட்டு அங்கிருக்கும் விநாயகரையும், ராஜேஸ்வரி அம்மன் கோவிலையும், கருப்பண சாமி கோவிலையும் தரிசித்து மலை மீது பயணத்தை தொடர்ந்தோம். தாணிப்பாறையிலிருந்து கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் கடந்து வந்தால் வழுக்கு பாறை
இருக்கும் பின்பு அங்கிருந்து அரை மணி நேரம் நடக்க, ஓரளவு கற்பாறைகள் நிறைந்த பாதை வழியே வந்தால் செயின் பாறை  என்ற இடம் வரும்.  இரண்டு பாறைகள் சங்கிலியால் பிணைக்கப் பட்டிருக்கும்.  சில நேரங்களில்  தண்ணீர் அதிகம் ஓடும்.  அதனால் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு கடக்கலாம்.
 
வழுக்கு பாறை



சங்கிலிப் பாறை



சங்கிலிப் பாறையிலிருந்து ஒரு அரை மணி நேரம் நல்ல ஏற்றம் இருக்கும். நாங்களே கிட்டத்தட்ட மூன்று நான்கு தடவை தங்கி இளைப்பாறிச் சென்றோம்  மூச்சு வாங்கிப் போகும்.  அடுத்து ஓரளவு நல்ல பாதை இருக்கும். பசுத்தடம்என்ற இடம் வரும். இங்கு காமதேனு பசு வழி தெரியாமல் இருந்த ஒரு பக்தருக்கு வழி காட்டியதாகவும், அந்த காமதேனு பசுவின் கால் தடம் தான் பசுத்தடம் எனும் பகுதி என்று சொல்கிறார்கள்.
 



பசுத்தடம்




நமது  நண்பர்கள்

 
சிவகுமார் மற்றும் சிவராஜ்
  
ஹரி சிவகுமார்

  
செல்வகுமார்

அன்பு

 
நல்லி மனோகர்
 
தியாகு
அடுத்து ஒரு இறக்கம் இருக்கிறது. அந்த இறக்கம் உப்புத்துறையிலிருந்து (தேனி மாவட்டம்) வரும் பாதை.   

கோரக்கர் குகை
 அடுத்து நாம் நேரே மலை ஏறுவோம்.  அடுத்து வருவது கோரக்கர் குகை.  அடுத்து வருவது நாவல் ஊற்றுஎன்ற ஊற்று இருக்கும்.  குடிநீர் அதில் எடுத்துக் கொள்ளலாம்.  நீர் இனிப்பாக இருக்கும்.  வருடம் முழுவதும் நீர் இருக்கும்.  இங்கு தண்ணீர் வற்றுவதில்லை.
நாவல் ஊற்று

 

இரட்டை லிங்கம்

அடுத்து இரட்டை லிங்கம்இருக்கும்.  ஒரு லிங்கத்தில் சிவனும், ஒரு லிங்கத்தில் விஷ்ணுவும் இருப்பதாக நம்பிக்கை. 
இரட்டை லிங்கத்தை தாண்டி ஓரளவு இறக்கம் இருக்கும்.  அங்கு ஒரு சிறு நீர்வீழ்ச்சியும் இருக்கிறது.  சற்று சரிவு பாதையில் இறங்க வேண்டும். 

பிலாவடி கருப்பசாமி கோவில்

ஓரளவு நாம் பயணத்தின் இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்டோம்.  நல்ல ஏற்றம் இருக்கும்.  வழியில் பாதை நன்கு கற்கள் அடுக்கி, இரு பக்கங்களும் மரங்கள் நமக்கு தோகை பிடித்திருப்பது போன்று, ஒரு குகை போன்ற தோற்றமும் இருக்கும்.  நன்கு சில்லென்று இருக்கும்.  நம்மை ஆசுவாசப் படுத்திக் கொள்ளலாம்.  எவ்வளவு வெயில் இருந்தாலும் அங்கு மட்டும் குளிர்ச்சியாக இருக்கும். இது அங்கு சென்று  அனுபவித்தால் தான் தெரியும்.  இந்த ஏற்றம் முடிந்தவுடன் பிலாவடி கருப்பசாமி கோவில்இருக்கும்.  பலா மரத்தின் அடியில் கருப்பசாமி இருக்கிறார்.  காலங்கி நாதர் என்ற சித்தர் உலோகங்களை தங்கமாக மாற்றியதாகவும், அந்த தங்கங்களை ஒரு கிணற்றில் வைத்திருப்பதாகவும், அந்த கிணற்றுக்கு கருப்பசாமி தான் காவல் தெய்வம் என்றும் ஒரு நம்பிக்கை.  இங்கு கருப்பசாமியை தரிசனம் செய்து கொள்வோம். அடுத்து சற்று தூரம் சென்றால் ஒரு இடத்தில் இரண்டு பாதைகள் பிரியும்.  இடது பக்கம் உள்ள பாதையில் சென்றால் சந்தன மஹாலிங்கம்கோவில் இருக்கும்.  வலது பக்கம் உள்ள பாதையில் சென்றால் சுந்தர மஹாலிங்கம்கோவில் இருக்கும்.


இங்கு சித்தர் தோரண வாயில்’ – கோவிலின் முகப்புக்கு வந்து விட்டோம். இங்கு பதிணெண் சித்தர்கள் சிலை இருக்கின்றது.  பதினெட்டு சித்தர்களுக்கும் ஒரே இடத்தில் சிலை இருப்பது இங்கு மட்டும் தான் இது ஒரு தனி சிறப்பு.  எதிரே நவக்கிரகங்கள் இருக்கிறார்கள்.  அருகில் சட்ட நாதர் குகை இருக்கிறது.  அதன் அருகில் ஒரு இடத்தில் நீள் வட்டமான அமைப்பில் மூன்று கம்பிகளை வைத்து சமையல் செய்கிறார்கள்.  அதில் இருந்து விழும் சாம்பலை திருநீறாக வழங்குகிறார்கள். 

சந்தன மஹாலிங்கம் கோவிலுக்கு வந்து விட்டோம்.  இங்கு சுயம்பு லிங்கம் சந்தனக் காப்பிடப் பட்டிருக்கிறார்.  இங்கு சந்தனமும், திருநீறும் பிரசாதமாக வழங்கப் படுகிறது.  சுயம்பு லிங்கத்தை பிரகாரம் சுற்றி வரலாம்.  முன்பு சந்தன மரம் இருந்திருக்கிறது.  இப்போது இல்லை.  பக்கத்தில் ஆகாச கங்கை அருவி இருக்கிறது.  அருவியிலிருந்து வரும் தண்ணீர் தான் இங்கு பூஜைக்கு, சமையலுக்கு, குடிநீருக்கு எல்லாம்.  அருவிக்கு அடுத்தாற் போல் வினாயகர், முருகன், சந்தன மஹா தேவி எல்லாம் இருக்கிறார்கள்.  அனைவரையும் தரிசனம் செய்து கொள்வோம். 
சந்தன மஹாலிங்கம் கோவில்



ஆகாச கங்கை அருவி

 


சுந்தர மஹாலிங்கம் கோவில்

சுந்தரனார் என்ற சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடம்.  இவர் சுயம்பு லிங்கம்.  சற்று சாய்வாக இருக்கிறார்.  இங்கு விபூதி பிரசாதம் வழங்கப் படுகிறது.  இங்கு பூஜை நேரத்தில் சங்கு ஊதப்படுகிறது.  லிங்கருக்கு மேலே செப்பு கலயம் இருக்கிறது.  நாள் முழுக்க நீர் சொட்டு சொட்டாக விழுந்து கொண்டிருக்கிறது.  இது ஒரு வித்தியாசமான அமைப்பு.  இது சற்று பெரிய கோவில்.  பிரகாரம் சுற்றி வரலாம்.

சதுரகிரியில் நாம் பார்க்க வேண்டிய இடங்கள்

1.தானிப் பாறை.                
2.ஆசிர்வாத விநாயகர்.                  
3.கருப்பசாமி                    
4.குதிரைகுத்தி                                           
5.வழுக்குப் பாறை                                    
6.அத்திபூத்து                                               
7 .கோணத்தலை வாசல்                    
8.கோரக்கர்குகை                                      
9.அரிசிப்பாறை                                        
10.காலற்ற நாற்காலிப் பாறை          
11.இரட்டைலிங்கம்                                  
12.நாவலூற்று                                            
13.பசுகடை                                                  
14.பிலாவடி கருப்பு                                  
15.மூலிகைக் கினறு                                                
16.சுந்தரமகாலிங்கம் கோவில்           
17.சந்தன மகாலிங்கம் கோவில்  
18.ஆனந்தவல்லி 
19.காளிகா பெரும்காடு
20.காளிகா தீர்த்தம்
21.ஜோதிமரம்
22.வனதுர்க்கை
23.தவசிக்குகை
24.நவகிரக மலை
25.நெல்லிவனம்
26.வெள்ளைப்பிள்ளையா
27 .அடுக்குப்பாறை
28 .ஐஸ்பாறை
29.மூலிகைவனம்
30.முகரை வீங்கி மரம்
31.பெரிய மகாலிங்கம்  
32.பெரிய கல்திருவோடு
33.கோரக்கர் குண்டம்

நன்றி!!! அனைவரும் சுந்தர மற்றும் சந்தன மகாலிங்கத்தை தரிசிப்போம் ஆண்டவனின் அருளாசி பெறுவோம்..

Popular Posts