உள்ளங்களை நேசிப்பவர்கள்

Monday, August 1, 2011

கொங்குநாட்டில் பஞ்சபூத திருத்தலங்கள்


கொங்குநாட்டில் பஞ்சபூத திருத்தலங்கள்

நமது கொங்குநாட்டில் அடியார்களால் பாடல்பெற்ற பிரசித்திபெற்ற திருத்தலங்கள் பல உள்ளன, அவற்றுள் பஞ்சபூத திருத்தலங்களாக  கீழ்க்கண்ட ஐந்து திருத்தலங்கள் பற்றி பல பாடல்களில் அடியார்கள் குறிப்பிட்டுள்ளார் அவைகள் இறைவனின் நமசிவாய என்னும் மந்திர சொல்லை ஒத்துவருகிறது
ந  -    நிலம்     -      கருவூர் (கரூர்) 
ம  -    நீர்        -     கொடுமுடி (வெஞ்சைமாக்கறை) 
சி  -    நெருப்பு   -     திருச்செங்கோடு (செங்குன்றூர்) 
வா -    வாயு     -     பவானி (திருநணா) 
ய  -    ஆகாயம்  -     அவினாசி (பூண்டி)

இதனைப்பற்றிய பழம்பெரும் பாடல் ஒன்று

ஆதி கருவூர் அணிவெஞ்சை மாக்கறைசை
நீதி அவினாசி நீள்நணா - மேதினியின்
தஞ்சமாம் செங்குன்றூர் தன்முருகன் பூண்டி தமை
நெஞ்சமே நித்தம் நித்தம் நினை

திருத்தலயாத்திரை செல்லும்முறை

இத்திருத்தல யாத்திரை செல்வோர் முதலில் கரூர் அல்லது கொடுமுடியில் தொடங்கி முறையே மூன்றாவது திருச்செங்கோடு, பவானி கடைசியாக அவினாசியில் முடிக்கவேண்டும். முறையே கொடுமுடி காவேரியிலும் மற்றும் பவானி கூடுதுறையிலும் குளிக்க வேண்டும். யாத்திரை தொடங்கியது முதல் முடியும் வரை ஒருநாள் முழுவதும் சிவாய நம ஓம், சிவாய நமஓம் : சிவாய நமஓம், நமசிவாய சொல்லிக்கொண்டு யாத்திரை செல்லவேண்டும்.

யாத்திரையானது அதிகாலை ஆறு மணிக்கு கொடுமுடி நாதரையும், காலை ஒன்பது மணிக்கு பசுபதீஸ்வரரையும், மதியம் பன்னிரண்டு மணிக்கு அர்த்தநாதீஸ்வரரையும், மாலை நான்கு மணிக்கு சங்கமேஸ்வரரையும், மாலை ஆறு மணிக்கு அவனாசி லிங்கேஸ்வரரையும் வணங்கி வாழ்த்து துதி போற்றி வரவும்.

திருத்தலயாத்திரையின் பயன்கள்
       ஏதேனும் ஒரு சிவ திருத்தலத்தில் ஐந்து ஏழைகளுக்கு அல்லது அடியார்களுக்கு உணவு அளிக்கவேண்டும். ஐந்து பசுக்களுக்கு புல் கொடுக்கவேண்டும். முன்னோர்களுக்கு பிண்டமும், பறவைகளுக்கு உணவும் கொடுக்கவேண்டும்.இதனையே பஞ்ச மஹா யக்ஞம் என்று வேதம் கூறுகிறது.

இவ்வாறு செய்து பஞ்சபூத திருத்தல யாத்திரை சென்றால் பஞ்ச மஹா பாவங்கள் (கொலை, களவு, கள், காமம், பொய்) விலகும் என்பது ஐதீகம் ஆகும்.

நன்றி: தவத்திரு சுவாமி ரத்தினானந்தகிரி, சித்தர் தவகுடில், சிவன்மலை, காங்கேயம்.

1 comment:

Anonymous said...

good sharing

Popular Posts