உள்ளங்களை நேசிப்பவர்கள்

Saturday, July 30, 2011

ஆயகலைகள் அறுபத்து நான்கு எவை தெரியுமா!

ஆய கலைகளை அறுபத்து நான்கு வகையாக பிரித்துள்ளனர், அவைகளின் பட்டியல்..

1. அக்கரவிலக்கணம்             
2.
இலிகிதம்
                                                                    
3.
கணிதம்
                     
4.
வேதம்

5.
புராணம்
6.
வியாகரணம்

7.
நீதி சாத்திரம்
8.
சோதிட சாத்திரம்
9.
தர்ம சாத்திரம்
10.
யோக சாத்திரம்
11.
மந்திர சாத்திரம்
12.
சகுன சாத்திரம்
13.
சிற்ப சாத்திரம்
14.
வைத்திய சாத்திரம்
15.
உருவ சாத்திரம்
16.
இதிகாசம்
17.
காவியம்
18.
அலங்காரம்

19.
மதுரபாடனம்
20.
நாடகம்
21.
நிருத்தம்
22.
சத்தப்பிரமம்
23.
வீணை
24.
வேணு
25.
மிருதங்கம்
26.
தாளம்
27.
அத்திரப்பரீட்சை
28.
கனகபரீட்சை
29.
ரத பரீட்சை
30.
கசபரீட்சை
31.
அசுவபரீட்சை
32.
ரத்திரனப்பரீட்சை
33.
பூமிபரீட்சை
34.
சங்ககிராம இலக்கணம்
35.
மல்யுத்தம்
36.
ஆகரூடணம்
37.
உச்சாடணம்
38.
விந்து வேடணம்
39.
மதன சாத்திரம்
40.
மோகனம்
41.
வசீகரணம்
42.
ரசவாதம்
43.
காந்தருவவாதம்
44.
பைபீலவாதம்
45.
கவுத்துக வாதம்
46.
தாது வாதம்
47.
காருடம்
48.
நட்டம்
49.
முட்டி
50.
ஆகாயப் பிரவேசம்
51.
ஆகாய கமணம்
52.
பரகாயப் பிரவேசம்
53.
அதிரிசயம்
54.
இந்திரசாபம்
55.
மகேந்திரசாபம்
56.
அக்கினித்தம்பம்
57.
சலத்தம்பம்
58.
வாயுத்தம்பம்
59.
நிட்டித்தம்பம்
60.
வாக்குத்தம்பம்
61.
சுக்கிலத்தம்பம்
62.
கன்னத்தம்பம்
63.
கட்கத் தம்பம்
64.
அவத்தைப் பிரயோகம்

Wednesday, July 27, 2011

சிவன்மலை

சிவன்மலையின் மகிமைகள்-1

அன்பார்ந்த ஆன்மீக வாசகர்களே

கொங்கு மண்டலமான திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்தில் சிவன்மலை எனும் சிவவாக்கியரின் சித்தர்மலை உள்ளது.

இம்மலையானது சிவனின் உருவமான  லிங்க வடிவத்தில் அழகிய வனப்புடன் இயற்கை எழிலோடு ரம்யமாக அமைந்துள்ளது.

இங்கு சுப்ரமணிய சுவாமியாக முருகப்பெருமாள் வள்ளி மற்றும் தெய்வானையுடன் இணைந்து சிவாச்சலபதியாக அருள்பாலிக்கிறார்.

ஒரு நிகழ்வு குறித்து உலகம் அறியும் முன்பே சொல்லும் ஒரு சக்தி வாய்ந்த மலைக் கோவில் என்பது இம்மலையின் தனிச்சிறப்பு. இங்கு முருகப்பெருமான் தான் தெரிவிக்க விரும்புவதை பக்தர்களின் கனவில் வந்து கூறி கட்டளையிட்டு பின் நடப்பதை முன் கூட்டியே தெரிவி்க்கும் அபூர்வ சக்தி கொண்டவர்.

கடவுள் கனவில் சொன்னது உண்மை தானா என்று தெரிந்து கொள்ள கோயில் நிர்வாகிகள் சிரசு பூக்களை சாமி மீது  வைத்து பூச்சயனம் கேட்பார்கள். பின்பு அந்த பொருளை கண்ணாடி பெட்டியில்  வைத்து அதில் இதைச் சொன்ன பக்தரின் பெயரும், அவர் கோயிலில் வந்து சொன்ன தேதியும் மறவாமல் குறிப்பிடுவார்.

இம்மலையானது காங்கேயம் - திருப்பூர் நெடுஞ்சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இம்மலைக்கு அனைவரும் வருக! முருகனின் அருள் ஆசி பெருக!


Popular Posts