உள்ளங்களை நேசிப்பவர்கள்

Sunday, September 18, 2011

பொன்மொழிகள் (உயிரோட்டமானவை)

    பூனைக்கும் எலிக்கும் இடையேயான போட்டியில்
       
பெரும்பாலும் எலியே வெற்றி பெறுகிறது.
       
காரணம்:
       
பூனை உணவிற்காக ஓடுகிறது..!
       எலி வாழ்க்கைக்காக ஓடுகிறது…!

   ஒவ்வோர் ஏமாற்றமும் ஏதோவொரு மாற்றத்திற்கான துவக்கமாகவே    இருக்கிறது....

   முன்னேற்றத்தை நோக்கி - எவ்வளவு சிறியதாயிருந்தாலும் பரவாயில்லை - அடி எடுத்து வையுங்கள்.

   முந்தைய காலத்தில்
கடிகாரங்கள் இல்லை
ஆனால் கடினமாக உழைக்க போதிய
நேரம் இருந்தது

   பாடத்தை சொல்லிக்கொடுத்து பின்பு தேர்வை வைக்கும்
நம் ஆசிரியர்கள் போல் அல்ல, வாழ்க்கை.
அது சற்று கடினமானது.
நமக்கு தேர்வினை வைத்துவிட்டு பின்பே அதன் பாடத்தை
நமக்கு கற்பிக்கிறது..

   பசி, தாகத்தை விட பெரியது சுயமரியாதை....

   பிடிவாதம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றுதான். என்ன, பிடித்தமான ஒன்றின் மீது பிடிவாதமாய் இருக்கவேண்டும்.

   கற்பனையில் உருவாகும் கவலைகளை எண்ணி நிஜத்தில் வருந்தாதீர்கள்.

   வாய்ப்புகளைப் பெறுபவன் அதிர்ஷ்டசாலி !வாய்ப்புகளை உருவாக்குபவன் அறிவாளி !
வாய்ப்புகளை சரியாய் பயன்படுத்துபவன் வெற்றியாளன் !!!

   ஒரு பொய்க்கு உண்மையான
காரணம் இருக்கும்,ஒரு உண்மைக்கு பொய்யான
காரணம் இருக்கமுடியாது

1 comment:

Anonymous said...

உங்கள் பொன்மொழிகள் பிரமாதம்-
ஒவோன்றுக்கும் ஒரு கோடி நன்றி!

prana

Popular Posts